திருப்பூர் மாவட்டம் உடுமலை கண்ணாடிபுத்தூரில் 1,500 குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பினை வழங்கினார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் கோமாரி நோய் உள்ளிட்ட கால்நடை நோய்களுக்காக ரூ.15,000 கோடியும், கால்நடை பராமரிப்பு துறையின் உள்கட்டமைப்புக்கு ரூ.13,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
'மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி' - உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: கால்நடை பராமரிப்பு துறைக்கு நிதி ஒதுக்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
minister-udumalai-radhakrisminister-udumalai-radhakrishnanhnan
அதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது நன்றிகள் எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், கடந்த 10 நாள்களாக திருப்பூர் மாவட்டத்தில் கரோனோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், அனைவரும் முழு சுகாதாரக் கட்டுப்பாட்டுடன் இருந்து கரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாற உதவவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
இதையும் படிங்க:குமரி மக்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ள கோவிட்-19 உதவி மையம்!