சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த விளங்கிய ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளன. விபத்துகளை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்தை மாற்றவேண்டும்.