தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”பல்லடத்தை அதிமுகவின் எஃகுக் கோட்டையாக மாற்றுவேன்” - உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி! - AIADMK Booth Committee Executives Meeting

திருப்பூர் : பல்லடம் தொகுதியை அதிமுகவின் எஃகுக் கோட்டையாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு  அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  Minister Udumalai Radhakrishnan press conference  AIADMK Booth Committee Executives Meeting  Minister Udumalai Radhakrishnan
Minister Udumalai Radhakrishnan press conference

By

Published : Nov 24, 2020, 7:38 PM IST

அதிமுகவின் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலராக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் வரும் டிசம்பர் 2ஆம் தேதி மாவட்டச் செயலராகப் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இன்று (நவ.24) பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில், திருப்பூர் புறநகர் மற்றும் மேற்கு மாவட்டம், பல்லடம் பொங்கலூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ”திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலராக எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருகின்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்லடம் தொகுதியை அதிமுகவின் எஃகுக் கோட்டையாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:”காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்படும்” - உடுமலை ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details