திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நிதி வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ஐந்து 108 ஆம்புலன்ஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த உடுமலை ராதாகிருஷ்ணன்! - 108 ஆம்புலன்ஸ் சேவை
திருப்பூர் : உடுமலை அரசு மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து 108 ஆம்புலன்ஸ்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
Minister Udumalai Radhakrishnan launches 108 ambulance service
இதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் நடைபெற்ற 64ஆவது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 10 மாணவ மாணவியருக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள், சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
இதையும் படிங்க:108 ஆம்புலன்ஸ் வாடகை வாகனமாக இயக்கம்... வீடியோ ஆதாரத்தால் குழப்பம்!