திருப்பூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் நடைபெற்றுது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, "2021இல் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவது உறுதி. குறுக்கு வழியில் முதலமைச்சராக வர மு.க. ஸ்டாலின் முயற்சி செய்கிறார். வழக்கமாக ஸ்டாலின் பொய் மட்டுமே பேசுவார். எதுவும் செய்ய மாட்டார். ஆனால் முதலமைச்சர் செய்வார்.
அதன் வெளிப்பாடே விவசாயக் கடன் தள்ளுபடி. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் தமிழ்நாடு முதலமைச்சரை ஏற்றுக்கொண்டுவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் பொய்களை பேசி மட்டுமே வெற்றிபெற்றார்.