தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் பழனிசாமி, அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர்.
சபாநாயகர், அமைச்சர் வாகனங்கள் விபத்து இதனிடையே, சபாநாயகர் தனபால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பயணித்த வாகனங்கள் கொடுவாய் அருகே விபத்துக்குள்ளானது. இதில் சபாநாயகருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தவிர இரு ஓட்டுநர்களும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காரில் பயணித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வேறு வாகனத்தில் பொதுக்கூட்ட இடத்திற்கு விரைந்தனர்.
இதையும் படிங்க:மோடி வருகைக்கு எதிர்ப்பு - முகிலன் கைது