வாணியம்பாடி நியூடெல்லி பகுதியில் அதிமுக சார்பில், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் கலந்து கொண்டு, நலவாரியத்தின் 53 பிரிவுகளில் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
அப்போது அவர், “ கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், இஸ்லாமிய மக்கள் திமுகவிற்கு வாக்களித்தீர்கள். ஆனால் இதுநாள் வரை திமுக எம்பி தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரே அரசு அதிமுக தான்.