திருப்பூர் மாவட்டத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதில் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆழியார் வடிநிலக் கோட்டம் மற்றும் திருமூர்த்தி கோட்டத்திலுள்ள பாசன விவசாயிகள் நலச் சங்கங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்றுவருகின்றன.
குடிமராமத்துப் பணிகளை ஆய்வுசெய்த அமைச்சர் - தூர்வாரும் பணி
திருப்பூர்: பல்லடம் பகுதிகளில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
Minister udumalai Radhakrishnan inspection
இந்நிலையில் அரசு சார்பில் 90 விழுக்காடு பாசனதாரர்கள் சங்கத்தின் சார்பில் 10 விழுக்காடு பங்களிப்பு நிதியுடன் விவசாயிகளின் மேற்பார்வையில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.