தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச மதிப்பில் பொருள் சேதம்! - திருப்பூரில் பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

fire accident
fire accident

By

Published : Jan 15, 2020, 11:17 PM IST

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் நான்கு ரோடு பகுதியில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான பஞ்சு குடோன் ஒன்று உள்ளது. இங்கு காடா துணி மற்றும் துணியிலிருந்து பஞ்சு தயாரிப்பதற்கான இயந்திரம் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. இன்று பொங்கல் பண்டிகை என்பதால் குடோனுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினர்

இந்நிலையில், பஞ்சு குடோனில் தொழிலாளர்கள் யாரும் இல்லாத சூழலில் திடீரென குடோனிலிருந்து புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்தை போற்றும் சமத்துவ பொங்கல்

மேலும், இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details