தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதிவு செய்தும் தராத டிக்கெட்டுகள்: வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

திருப்பூர்: ஆன்லைனில் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் உடனடியாக ரயில் டிக்கெட்டுக்கான டோக்கனை வழங்க கோரியும் குன்னாங்கள் பாளையம் பிரிவு அருகே 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

migrant workers protest to give booked tickets in tiruppur
migrant workers protest to give booked tickets in tiruppur

By

Published : May 21, 2020, 12:28 PM IST

கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் தொழில்கள் அனைத்தும் முடங்கியதால் பலர் வேலை இல்லாமல் தவித்து வந்தனர்.

இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிவரும் வடமாநில தொழிலாளர்களும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தீர்மானித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ரயில், பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் குன்னாங்கள் பாளையம் பிரிவு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அப்பகுதியைச் சுற்றியுள்ள பனியன் கம்பெனிகளில் வேலை செய்து வந்தனர்.

இதையும் படிங்க... ஊருக்கு செல்ல அனுமதி கேட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

தற்போது அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை ஊருக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட்டை மாவட்ட நிர்வாகம் தரவில்லை என கூறப்படுகிறது.

வடமாநித் தொழிலாளர்கள் போராட்டம்

இதையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குன்னாங்கள் பாளையம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு உடனடியாக ரயில் டிக்கெட் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் டோக்கன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க...'மடி தந்து மனிதம் காத்த நண்பன்' - உதிர்ந்த நட்பின் உண்மை சம்பவம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details