தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் - மூன்று ரயில்கள் மூலம் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர்: மூன்று சிறப்பு ரயில்கள் மூலம் பிகார், ஒரிசா, உத்தரப் பிரதேச மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

migrant labourers sent to home town from Tiruppur
migrant labourers sent to home town from Tiruppur

By

Published : May 26, 2020, 8:01 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 500 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்று பிகார், ஒரிசா, உத்திரப் பிரதேச மாநிலங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் திருப்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன. இதில் 4,500 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான உணவு தண்ணீர் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க... தொழிலாளர்களிடம் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details