கரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்களில் நேரங்களை குறைப்பதாக வணிகர் சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுவருகிறது.
அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளிலும் வரும் 23ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 7ஆம் தேதி வரை வணிக நிறுவனங்களின் நேரங்களை குறைத்து செயல்பட முடிவு எடுத்திருப்பதாக பல்லடம் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.