தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீம்ஸா போடுற... தனியா இரு போ... மீம் கிரியட்டரை தனிமைப்படுத்திய அலுவலர்கள் - அரசு மீம்ஸ்

திருப்பூர்: சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக மீம்ஸ் போட்டவரை வீட்டில் அரசு அலுவலர்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

memes
memes

By

Published : May 2, 2020, 12:06 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள நம்பியாமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ஆவணப்படங்களை எடுத்து வருகிறார். கடந்த 60 நாள்களுக்கு முன்பு ராஜா கேரளா சென்று வந்துள்ளார். இதன் பின் அரசின் சில நடவடிக்கைகளை விமர்சித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பலமுறை இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போன் கால்கள் வந்தாக கூறப்படுகிறது.

ராஜாவின் மீம்ஸ்

இந்நிலையில் நேற்று (மே 1) இவரது வீட்டிற்கு வந்த அரசு அலுவலர்கள் எந்த விதமான காரணமும் கூறாமல் இவரை 28 நாள்கள் தனிமைப்படுத்தியுள்ளதாக அவரது வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டியனர்.

ராஜாவின் பதிவு

இதுகுறித்து ராஜா தற்போது வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நாள் முதல் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறேன். அரசு குறிப்பிட்ட நாள்களில் வெளியூர் சென்று வரவோ சென்று வந்தவர்களுடன் நேரடி தொடர்போ எதுவும் இல்லை. தன்னை தனிமைப்படுத்தியதற்கான காரணத்தையும் அலுவலர்கள் கூறவில்லை என அதில் கூறியுள்ளார்.

சமூதவலைதளத்தில் வீடியோ பதிவிட்ட ராஜா
ராஜாவின் மீம்ஸ்

ABOUT THE AUTHOR

...view details