மேஷம்: இன்று உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். நீங்கள் மிகச் சரியாக திட்டமிட்டு வெற்றிகரமாக அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவீர்கள். எனினும் முன்னேற்றம் சிறிது மந்த கதியிலேயே இருக்கும். மனம் தளர வேண்டாம். உங்களுக்கு கடவுளின் ஆசி எப்போதும் உண்டு.
ரிஷபம்: இன்று நீங்கள் உங்களது நண்பர்களுடன், உங்களது சாதனையை எடுத்துரைக்கும் வகையிலான வெற்றிவிழாவை கொண்டாடுவீர்கள். வர்த்தகத்திலும், அலுவலகத்திலும் உங்களது முற்போக்கான சிந்தனையின் மூலம், வளமான எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குதூகலமாக இருப்பீர்கள்.
மிதுனம்: இன்று, நீங்கள் மற்றவர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிப்பதில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பு மற்றும் நிதி நிலைமை தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். அன்பினால் இணைக்கப்பட்ட உறவுகள் நீண்ட காலத்திற்கு வலுவானதாக இருக்கும்.
கடகம்: நெருக்கமான நண்பர்கள், உங்கள் மனப்பான்மையை கண்டு பெருமை கொள்வார்கள். அவர்களுடன் நேரத்தை கழித்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். நண்பர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் நீண்ட காலத்திற்கு, நீடித்து இருக்கும்.
சிம்மம்: இன்றைய தினம், சாதக மற்றும் பாதக பலன்களை கொண்டது ஆகும். ஒருபுறம் உங்களது வர்த்தகக் கூட்டாளி அல்லது வாழ்க்கைத் துணை தொடர்பாக உங்களுக்கு அதிருப்தி இருக்கும். மற்றொருபுறம், உங்களது முயற்சிக்கு, எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்திருக்கும். நண்பரின் அறிவுரையின் காரணமாக நீங்கள் இரு விஷயங்களையும் ஏற்றுக் கொள்வீர்கள்.
கன்னி: நாம் எப்போதும், நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோம். இன்று அவ்வாறு உங்களால் இருக்க முடியாது. உங்களது உடல் நல பாதிப்பு காரணமாக, நீங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்க வழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.