தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிவாளைக் காட்டி கொள்ளையடித்த நபர்: சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸ் - சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸ்

திருப்பூர்: தனியார் நகை அடகு கடையில் அரிவாளைக் காட்டிக் கொள்ளையடித்துச் சென்ற நபரைக் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Robbery
Robbery

By

Published : May 23, 2020, 7:26 PM IST

திருப்பூர் மாநகராட்சி குமரன் சாலையில் தனியாருக்குச் சொந்தமான நகை அடகு கடையின் கிளை அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கடைக்குள் ஹெல்மெட் அணிந்தபடி நுழைந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய், பத்து சவரன் நகை உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்து தப்பிச்சென்றார்.

கொள்ளையடிக்கும் சிசிடிவி

இதனையடுத்து அந்நிறுவனத்தின் மேலாளர் தங்கராஜ் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவாகி இருந்த நபர், முன்னதாக பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுபூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: முகக்கவசங்களில் வெரைட்டி: அசத்தும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்

ABOUT THE AUTHOR

...view details