தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது - 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

திருப்பூர்: 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

pocso case arrest
இளைஞர் போக்சோவில் கைது

By

Published : Feb 7, 2021, 9:47 AM IST

திருப்பூரில் அமைந்துள்ள பனியன் பிரிண்டிங் பட்டறையில் வேலை செய்து வரும் கார்த்திக் (25), பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழகியுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததுடன், சிறுமியை அவருடைய உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அனுராதா இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதில் கார்த்திக் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கியை திருடிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details