தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் குடிநீர் வசதி சரியாக இல்லை... மாநகராட்சி அலுவலகம் முற்றுகை! - Tirupur municipal office

திருப்பூர்: மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த மூன்று மாதமாக குடிநீர் விநியோகம் சரியாக இல்லாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ropro
ro

By

Published : Nov 18, 2020, 2:11 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த 3 மாத காலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பொது மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, குடிநீர் விநியோகத்தை உடனடியாக சரிசெய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் பலரும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details