தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளா அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்து: லாரி ஓட்டுனர் கைது

திருப்பூர்: கேரளா அரசு பேருந்தின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், விபத்திற்கு காரணமான லாரி ஒட்டுனர் ஹேமந்த் ராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Feb 21, 2020, 10:45 PM IST

திருப்பூர்: கேரளா அரசுப் பேருந்தின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், விபத்திற்க்கு காரணமான லாரி ஒட்டுனர் ஹேமந்த் ராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: கேரளா அரசுப் பேருந்தின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், விபத்திற்க்கு காரணமான லாரி ஒட்டுனர் ஹேமந்த் ராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெங்களூரிலிருந்து கேரளா நோக்கி சென்ற அரசு பேருந்தும், கேரளாவிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியும், நேற்று அதிகாலையில் சேலம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பெண்கள் உட்பட 19 பேர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

கேரளா அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்து லாரி ஒட்டுனர் கைது

இந்த கோர விபத்திற்கு காரணமான லாரி ஒட்டுனர் ஹேமந்த் ராஜ் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், காவல் துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஹேமந்த் ராஜை கைது செய்த காவல் துறையினர், இன்று அவரை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி உதய சூர்யா அவர்கள், ஹேமந்த் ராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் ஹேமந்த் ராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:சாலையில் சென்ற வேனில் திடீரென்று தீ விபத்து - ஓட்டுநர் காயம்!

ABOUT THE AUTHOR

...view details