திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே முட்டை லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த 3 கடைகள் மீது நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து மோதியது. பின்னர் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் சாலையோர கடைகள் முற்றிலும் சேதமடைந்தன. டூ வீலர் ஒர்க்ஷாப்பில் இருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான முட்டைகளும் உடைந்தன.