தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் - மாதிரி வாக்குச்சாவடிகளை திறந்துவைத்த ஆட்சியர்!

திருப்பூர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குச்சாவடியை திறந்துவைத்து, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டார்.

collector
collector

By

Published : Dec 24, 2019, 12:54 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 17 ஆயிரத்து 950 வாக்காளர்களும், 11 லட்சத்து 31 ஆயிரத்து 445 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 225 என மொத்த வாக்காளர்கள் 22 லட்சத்து 49 ஆயிரத்து 650 ஆகும்.

மாதிரி வாக்குச்சாவடிகளை திறந்துவைத்த ஆட்சியர்

திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 13,495 அதிகமாக உள்ளனர். அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: திருவள்ளூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details