திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது, மகள் அஷ்விகா (7), இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வார காலமாக பெயர் தெரியாத வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் எனப் பல இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
வைரஸ் காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு! - tripur distict news
திருப்பூர்: நாச்சிபாளையம் அருகே 7 வயது சிறுமி பெயர் தெரியாத வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சிறுமி
உடல்நிலை மிகவும் மோசமானதால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தார். ஏழு வயது சிறுமி காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு