காங்கேயம் ஒன்றியம் பாப்பினி ஊராட்சி உத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). விவசாயியான இவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்துவருகிறார்.
சுப்பிரமணி தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக, ஆண்டிகாட்டுத் தோட்டத்தில் நேற்று (செப்டம்பர் 2) காலை விட்டிருந்தார். மதியம் 3 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது ஆடுகள் தென்னைமரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் மின்னல் தாக்கியதில் 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.