தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஞ்சலிங்கம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது! - water falls

திருப்பூர்: பஞ்சலிங்கம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பஞ்சலிங்கம் அருவி

By

Published : May 5, 2019, 3:06 AM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்திருக்கிறது பஞ்சலிங்கம் அருவி. இங்கு, விடுமுறை நாட்களில் உடுமலை, மடத்துக்குளம், முக்கோணம் போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஞ்சலிங்கம் அருவியில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details