தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரவைத் தேர்தலுக்குத் தயார் நிலையில் தமிழ்நாட்டின் டாலர் சிட்டி! - Tirupur as the legislature prepares for elections.

திருப்பூர்: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறை, வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.

சட்டப்பேரவை தேர்தல்
சட்டப்பேரவை தேர்தல்

By

Published : Mar 2, 2021, 8:31 PM IST

திருப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறை, வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுடன் ஆய்வுசெய்தார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் திருப்பூரில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

தேர்தலுக்குத் தயார் நிலையில் திருப்பூர்

மேலும், அவ்விடத்திலேயே வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயன் காவல் துறை, தேர்தல் கண்காணிப்புக் குழுவினருடன் நேரில் ஆய்வுசெய்து ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

...view details