தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில அபகரிப்பு வழக்கு - திமுக எம்.எல்.ஏ ஆஜர் - நில அபகரிப்பு வழக்கு

திருப்பூர்: காகித ஆலை அபகரிப்பு வழக்குத் தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத் சக்ஸேனா ஆகியோர் திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்

அன்பழகன்
அன்பழகன்

By

Published : Dec 4, 2019, 10:44 PM IST

கடந்த 2011ஆம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள காகித ஆலையை, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்நிலையில், ஆலை உரிமையாளர் கிங்ஸ்லி, தனது தம்பியின் பங்கை அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், கிரயம் செய்யும் முன்பு பிரச்னை ஏற்பட்டபோது, திமுக பிரமுகர்களான ஜெ. அன்பழகன் எம்எல்ஏ., சரத் சக்ஸேனா ஆகியோர் தன்னை மிரட்டி, காகித ஆலையை அபகரித்ததாக உடுமலை நில அபகரிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெ. அன்பழகன், சக்ஸேனா, கிங்ஸ்லி, ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழக்கின் தீர்ப்பை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:

சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details