தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி-ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.. சாதனை படைத்த திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனம்.. - today latest news

Knitwear made from waste plastic bottles: திருப்பூரைச் சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று கழிவு பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக நூல்களை உற்பத்தி செய்து அதில் பின்னலாடைகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

Knitwear made from waste plastic bottles
டி-ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.. சாதனை படைத்த திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 2:34 PM IST

டி-ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.. சாதனை படைத்த திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனம்..

திருப்பூர்:புவி வெப்பமயமாதலைத் தடுக்க, மறுசுழற்சியைப் பின்பற்ற வேண்டும் என ஒருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தாலும், மறுபுறம் தற்போதைய காலகட்டத்தில் நாள்தோறும் கடைகளில் விற்கப்படும் குடிநீர் மற்றும் குளிர் பாணங்களை வாங்கி குடிக்கும் பலர், அவை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சாலையோரம் அல்லது சாப்பிடும் உணவகங்களிலேயே வீசி செல்வதைக் காண முடிகிறது.

இந்த நிலையில், கழிவு பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக நூல் தயாரிக்கும் முயற்சியைக் கையில் எடுத்து, அதில் தற்போது அசாத்திய சாதனையை நிகழ்த்தி வருகின்றனர் திருப்பூரில் உள்ள சுலோச்சனா நிறுவனம். இந்த நிறுவனம் ஆடை தயாரிப்பு மற்றும் நூல் உற்பத்தி செய்யும் 86 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனமாகும்.

தற்போது இந்த நிறுவனத்தில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதற்காக நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் தினசரி 70 லட்சம் பிளாஸ்டிக் கழிவு பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்த நிறுவனத்தில் உள்ள நான்கு பெரிய இயந்திரங்களில் பல்வேறு கட்ட பணிகளுக்குப் பிறகு செயற்கை நூலிழையாக மாற்றப்படுகின்றன.

இதில் முதல் கட்டமாகக் கழிவு பாட்டில்கள் அரைத்து துகள்களாக மாற்றப்படுகிறது. இந்த துகள்கள் சுத்தம் செய்யப்பட்டு உலர்த்திய பிறகு உருக்கப்படுகிறது. அப்படி உருக்கப்பட்டு திரவ நிலையில் இருக்கும் போதே தேவையான வண்ணங்களை அதில் சேர்த்து விடுகின்றனர். இதன்மூலம் 70 நிறங்களில் செயற்கை நூலிழை தயாரிக்கப்பட்டு, பஞ்சு போல மாற்றப்படுகிறது.

இதன் அடுத்தகட்டமாகச் செயற்கை பஞ்சுகள் நூல் வடிவில் மாற்றப்படுகிறது. பிறகு அந்த நூலை வழக்கம்போல பின்னலாடை தயாரிக்கக் கூடிய பாலிஸ்டர் துணி வகைகளாக உருவாக்கப்படுகிறது. இறுதியாக இந்த துணிகள் தேவையான வடிவில் தைக்கப்பட்டு ஏற்றுமதிக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வாறு 20 முதல் 40 பாட்டில்களை உருக்கி ஒரு டி-ஷர்ட் தயாரிக்க முடிகிறது. இவ்வாறு இந்த நிறுவனம் தினமும் 70 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி 110 டன் செயற்கை பாலிஸ்டர் நூலிழையைத் தயாரிக்கிறது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி சபரி கிரீஷ் கூறுகையில், "நாங்கள் தினசரி 70 லட்சம் பாட்டில்களை மறு சுழற்சி செய்து பாலிஸ்டர் நூலாக மாற்றி வருகிறோம். டோம் டை என்ற முறையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் சாயமிடப்படுகிறது. இதன் மூலம் தண்ணீரும், பணச்செலவும் குறைகிறது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த பாலிஸ்டர் பைபர் ஆயத்த ஆடை மட்டும் இல்லாமல் கார்ப்பெட் தயாரிப்பு, கார் உதிரி பாக தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எங்களது நிறுவனத்தில் பருத்தி கழிவுகளும் மறு சுழற்சி செய்யப்படுகிறது. எங்கள் நிறுவனத்துக்குள் வரக்கூடிய கழிவு பாட்டில்கள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

இதன் மூலம் 2 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பொறுக்கும் தொழிலாளர்கள் பயனடைகிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது, மறு சுழற்சி செய்யப்பட்ட செயற்கை நூலிழை மூலம் தயாரிக்கப்படும் பின்னலாடைகளை மேற்கத்திய வர்த்தகர்கள் ஆர்வமுடன் வாங்குகிறார்கள். தற்போது 96 சதவீத அளவுக்கு கார்பன் நியூட்ரல் நிறுவனமாக செயல்படுகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஆட்டோர் ஓட்டுநர்.. ஐஐடி, ஐஐஎம் மாணவர்களுக்கு பாடம் எடுக்க அழைப்பு.. சென்னையில் இப்படி ஒரு நபரா?

ABOUT THE AUTHOR

...view details