கந்த சஷ்டி கவசம் குறுந்தகட்டை வெளியிட்டார் எச். ராஜா - கந்தசஷ்டிகவசம் 2020
திருப்பூர்: கந்த சஷ்டி கவசம் ஆடியோ-வீடியோவுடன் கூடிய குறுந்தகட்டை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கந்த சஷ்டி கவசம் ஆடியோ-வீடியோவுடன் கூடிய குறுந்தகட்டை வெளியிட்டார்.
'திரௌபதி' இயக்குநர் மோகன் இயக்கத்தில், ஜுபின் இசையில் பாடகர் வேல்முருகன் பாடியுள்ள 'கந்தசஷ்டிகவசம் 2020' என்ற இசை ஆல்பம் உருவாகியுள்ளது.
இந்தக் குறுந்தகட்டை எச். ராஜா வெளியிட அதனை திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஆம்ஸ்ட்ராங்க் பழனிச்சாமி, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம், ராம ரவிக்குமார், கிஷோர் கே ஸ்வாமி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.