தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2023, 7:22 PM IST

ETV Bharat / state

திருப்பூர் மாவட்டத்தில் 7வது நாளாக தொடரும் கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம்... அரசுக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7வது நாளாக தொடரும் கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 7வது நாளாக தொடரும் கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் 7வது நாளாக தொடரும் கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் 7வது நாளாக தொடரும் கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருப்பூர்: கல்குவாரி கிரசர் மற்றும் லாரி உரிமையாளர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் 7வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கல்குவாரி, கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடந்த 26ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், சிறு கனிம நிறுவனங்களை பாதிக்கும் பென்ஸ் புரோவிஷன், மைனர் மினரல் நடவடிக்கைகளை நீக்குதல் மற்றும் தனி நபர் புகார் அடிப்படை தடை செய்தல் என ஏற்கனவே உள்ள அரசாணைப் படி 25 ஹெக்டேர் வரையிலான குவாரிகளுக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல் அனுமதி வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், கல்குவாரி, கிரசர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பல்லடம் காரணம்பேட்டை பகுதியில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்கப்பொருளாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டம் முழுவதும் 110 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாக பத்தாயிரத்து தொழிலாளர்களும் மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர்களும் பயனடைகின்றனர்.

திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டப் பகுதிகளுக்கு ஜல்லிக்கல், எம்-சாண்ட் விநியோகப்பட்டு வருகின்றனர். கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை கனிமவள அதிகாரிகள் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் முன்னறிவிப்பு அல்லது நோட்டீஸ் கொடுத்து ஆய்வு மேற்கொண்டால், ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக உள்ளோம்.

குவாரிகளை வரைமுறைப்படுத்த வேண்டும், அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்து இருந்தால், சமாதானத்திட்டம் கொண்டு வர வேண்டும். கனிமவளத் திட்டம், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு இல்லாமல் 2013ஆம் ஆண்டு முன்பு இருந்தது போலவே கல் குவாரிகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும்” என உரிமையாளர்களின் கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் பேசிய அவர், “தற்போது கல்குவாரி கற்களை வெட்டி எடுப்பதற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவிட்டதால், இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினால் தொழில் செய்ய எளிதாக இருக்கும். ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் போன்றவற்றை 20 வருடங்களாக ஒரே விலையில் தான் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால், இன்னும் விலை குறைக்க வாய்ப்பு உள்ளது.

சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், தனி நபர்கள் புகார் தெரிவித்தால் கல் குவாரி செயல்பாட்டை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால், எங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி தர வேண்டும்' என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:திமுகவினரால் ரயில் பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்: துரிதமாக செயல்பட்டு மீட்ட எஸ்.ஐ!

ABOUT THE AUTHOR

...view details