தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் ராஜீ என்பவருக்கு சொந்தமான வி.கே.ஆர்.ஜுவல்லரி உள்ளது. இந்த கடைக்கு பர்தா அணிந்த இரண்டு பெண்கள் கை குழந்தையுடன் வந்து தங்களிடம் உள்ள பழைய தங்க நகையை மாற்றி புதிய நகை எடுக்க வேண்டும் என கூறியதோடு அந்த பெண்கள் பழைய தங்க சங்கிலி ஒன்றை கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர்
அந்த நகையை சோதனையிட்ட கடை உரிமையாளர் ராஜூவும், கடை ஊழியர்களும் அந்த பெண்களுக்கு புதிய நகைகளை எடுத்து காட்டியுள்ளனர். அப்போது புதிய நகைகளை பார்ப்பது போல் நோட்டமிட்ட அந்த பெண்கள் தாங்கள் கொண்டுவந்த தங்க சங்கிலியை எடுத்து அவர்களுடைய பையில் போட்டுவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு செயினை அந்த இடத்தில் வைத்துள்ளனர்.