திருப்பூர் பூச்சக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி - குமுதம் தம்பதியினரின் மகன் யுவராஜ் என்பவருக்கும், திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் - இந்திராணி ஆகியோரின் மகளான திவ்யபாரதி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று விமரிசையாக திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
மக்கள் ஊரடங்கு: திருப்பூரில் எளிமையாக நடைபெற்ற திருமணம் - janta curfew
திருப்பூர்: மக்கள் ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி எளிமையான முறையில் புதுமணத் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால், கரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, திருமண விழாவுக்கு அழைக்கப்பட்ட அனைவரையும் வரவேண்டாம் என தகவல் சொல்லி விட்டு, போயம்பாளையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் அவசர அவசரமாக காலை 6 மணிக்குள் எளிமையாக திருமணம் செய்துகொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் மட்டும் கலந்துகொண்டனர். உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும், எளிமையாக நடத்தி மக்கள் ஊரடங்கில் பங்கேற்கிறோம் என திருமண வீட்டார் தெரிவித்தனர்.