திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு ஜனவரி 31ஆம் தேதி அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கான கால்கோள் விழா இன்று (ஜன.16) நடைபெற்றது. இதனை பல்லடம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயம் இன காளைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த இருப்பதாகவும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 500 காளைகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாகவும், கரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாகவும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருப்பூரில் ஜன.31ஆம் தேதி ஜல்லிக்கட்டு இதனைத் தொடர்ந்து அழகு மலை அடிவாரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு பெண்களுக்கான கோல போட்டி, கும்மியடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது.
இதையும் படிங்க:பாரம்பரிய நடனமாடி பொங்கல் விழா கொண்டாடிய மலைவாழ் மக்கள்...!