தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மநீம  பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை - மநீம கட்சி பொருளாளர் சந்திரசேகர்

திருப்பூர்: மநீம கட்சியின் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சுமார் 8 மணி நேரமாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

அனிதா டெக்ஸ்காட்
அனிதா டெக்ஸ்காட்

By

Published : Mar 17, 2021, 10:28 PM IST

திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரான இவர், அனிதா டெக்ஸ்காட் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்திவருகிறார். இவரின் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை, கரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து வழங்கிவருகிறது.

இந்நிலையில் சந்திரசேகரின் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சுமார் 8 மணி நேரமாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது வரை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தொடர்ந்து அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details