தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பள்ளிகளை காக்கக்கோரி சைக்கிள் பயணம்; போலீசார் தடுத்ததால் பரபரப்பு! - அரசுப் பள்ளி

திருப்பூர்: அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சைக்கிள் பேரணியை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ISA

By

Published : May 26, 2019, 11:58 PM IST

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று சைக்கிள் பேரணியை தொடங்கினர் .

இந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பேரணி

சென்னை, கோவை, கன்னியாகுமரரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொடங்கிய பேரணி 31 ஆம் தேதி திருச்சியில் முடிவடைகிறது. இந்நிலையில் கோவையிலிருந்து திருப்பூர் வழியாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை அனுமதி இல்லை என்று காவல்துறையினர் வீரபாண்டி அருகே தடுத்து நிறுத்தினர். பின்னர் போலிசாரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர் சங்கத்தினர் தங்கள் பயணத்தை தொடங்கினர். இந்த பயணத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details