திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை எஸ்.வி புரம் பகுதியில் இரும்பினால் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மேமாதம் 29ஆம் தேதி சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு இந்த நுழைவு வாயில் சாய்ந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள் சாய்ந்திருந்த நுழைவு வாயிலை சரிசெய்து விட்டு சென்றனர்.
அச்சத்தை ஏற்படுத்தும் இரும்பு நுழைவு வாயில்; சரிசெய்ய கோரிக்கை! - road creates probe
திருப்பூர்: உடுமலை எஸ்.வி புரம் பகுதியில் அமைந்துள்ள இரும்பு நுழைவு வாயில் மீண்டும் சாய்ந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.வி புரத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் இரும்பு நுழைவு வாயில்
இதையடுத்து இன்று அந்த நுழைவு வாயில் திடீரென சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் உயிரை பறிக்கும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மேலும் சாய்ந்துள்ள நுழைவு வாயிலை அப்புறப்படுத்துவும் கோரிக்கை வைத்துள்ளனர்.