தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினரின் ரோந்து வாகனங்கள் ஆய்வு - திருப்பூர் மாவட்ட காவல் ரோந்து வாகனங்கள்

திருப்பூர்: மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள ரோந்து வாகனங்களை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

ரோந்து வாகனங்கள் ஆய்வு
ரோந்து வாகனங்கள் ஆய்வு

By

Published : Jul 29, 2020, 7:13 PM IST

குற்றங்களை தடுக்கும் விதமாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் திருப்பூர் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒருபகுதியாக மாவட்டம் முழுவதிலும் 24 மணிநேரமும் ரோந்துப்பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை மாதம் ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையியல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, காங்கேயம், பல்லடம் சரகத்தில் ரோந்து பணிக்காக காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 83 இருசக்கர வாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்களை இன்று(ஜூலை 29) மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான ஆய்வுக்குழு ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் வாகனங்களின் தகுதி, அதன் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details