தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூர் தொகுதியில் இ. கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் வெற்றி - டாலர் சிட்டி

திருப்பூர்: திருப்பூர்  மக்களவைத் தொகுதியில்  போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 86 ஆயிரத்து 387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சுப்பராயன்

By

Published : May 23, 2019, 5:35 PM IST

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம்.ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகநாதன் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், இந்த தொகுதிக்கான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டன.

ஆரம்பத்தில் இருந்து திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை வகித்தார். இவர் நான்கு லட்சத்து 77 ஆயிரத்து 299 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மூன்று லட்சத்து 90 ஆயிரத்து 912 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 86 ஆயிரத்து 387 வாக்குகள் அதிகமாக பெற்று சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்பராயன், இரண்டு முறை திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், இந்தியாவின் 14ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details