திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. கேரள மாநிலம் மூணாறு மற்றும் மறையூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 87 அடியை எட்டியது.
கனமழை காரணமாக அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
திருப்பூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வர தொடங்கியது. நேற்று (செப்டம்பர் 4) இரவு 10 மணி அளவில் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அமராவதி ஆற்றில் 9 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கு பிறகு, தற்போது அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்ற ஒன்பது மதகுகளும் திறக்கப்பட்டன. தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 1380 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர் மட்டம் 88.49 அடியாக உள்ளது.
TAGGED:
அமராவதி அணை