தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து விடுபடவேண்டி 120 மணி நேரம் தொடர் யாகம் - spl pooja for corona

திருப்பூர்: கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவேண்டி போயம்பாளையம் பகுதியிலுள்ள வேட்டையன் சிவபெருமாள் கோயிலில் 120 மணி தொடர் யாகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

120 மணி நேர தொடர் யாகம்  கரோனாவிலிருந்து விடுபட யாகம்  திருப்பூர் வேட்டையன் சிவபெருமாள் கோயில்  வேட்டையன் சிவபெருமாள் கோயில் யாகம்  திருப்பூர் செய்திகள்  tiruppur vettudaiyan sivan temple
திருப்பூர்: கரோனாவிலிருந்து விடுபடவேண்டி 120 மணி நேரம் தொடர் யாகம்

By

Published : Jul 21, 2020, 2:17 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து திருப்பூர் மக்களை காப்பாற்றவும், உலக மக்கள் கரோனா நோயிலிருந்து விடுபட வேண்டியும் தொடர்ச்சியாக 5 நாட்கள் (120 மணி நேரம்) நவகிரகங்கள் உள்ளடக்கிய மஹா யாக பூஜை நேற்று (ஜூலை 20) போயம்பாளையம் பகுதியிலுள்ள வேட்டேயன் சிவபெருமாள் கோயிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் வேட்டையன் சிவபெருமாள் கோயிலில் நடைபெறும் தொடர் யாகம்

இக்கோயிலில் சிவபெருமான் முழு உருவத்துடன் வேடர் கோலத்தில் நின்றபடி அருள் பாலித்து வருகிறார். ஸ்ரீ சிவ சிவ மந்திர சுவாமிகள் தலைமையில் தொடங்கிய இந்த மஹா யாக பூஜையில் 108 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

யாகத்தில் வைக்கப்பட்டுள்ள 108 சிவலிங்கங்கள்

இதையும் படிங்க:பக்தர்கள் இல்லாமல் நடந்த அழகர்கோயில் ஆடி அமாவாசை திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details