திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொங்கூர் கிராமம் உள்ளது. இப்பகுதியின் விவசாய நிலங்களில் இருந்து செங்கல் சூலைக்கு செம்மண் கடத்தப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தாராபுரம் சார்- ஆட்சியர் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் அறிவுதலின்படி வருவாய்த் துறை ஆய்வாளர்கள் மகேந்திர வில்சன், மாய ராஜ், சித்தரஉத்தன் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சிவசாமி ஆகியோர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது கொங்கு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக லாரிகளில் செம்மண் கடத்திவந்த ஆறு பேரையும், அவர்களது லாரியையும் அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.