திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் தனியார் செப்டிக் டேங்க் வாகன உரிமையாளர்கள், வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் மனிதக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், நொய்யல் ஆற்றில் கலக்கின்றனர். இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், இன்று (செப்.02) திருப்பூர் - ஆரப்பாளையம் அருகே நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் கால்வாயில் தனியார் வாகனம் ஒன்று மனிதக் கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற நபர் இதுகுறித்து கேட்கையில், கழிவுகளை வெளியேற்றுவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நொய்யல் ஆற்றில் மனிதக் கழிவுகள் கலப்பு! - Human waste mixed into the river
திருப்பூர்: நொய்யல் ஆற்றில் தனியார் செப்டிக் டேங்க் வாகனங்கள் முறைகேடாக மனிதக் கழிவுகளை கலந்து வருகின்றன.
நொய்யல் ஆற்றில் மனித கழிவுகள் கலப்பு
தற்போது இதுகுறித்த காணொலியானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இதுபோன்று மனிதக் கழிவுகளை ஆற்றில் கலப்பதால், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இதையும் படிங்க:அடிப்படை வசதிகள் கோரி மாணாக்கர் மனு!