திருப்பூர், திருமுருகணப்பூண்டி பகுதியில் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், "மத்திய அரசு விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் காங்கிரஸ், திமுகவில் உள்ள போலி விவசாயிகளின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்.
’விவசாயம் பற்றி சிதம்பரத்திற்கு என்ன தெரியும்?’ - ஹெச்.ராஜா தாக்கு - Chidambaram did not know about agriculture
திருப்பூர் : ”விவசாயத்தைப் பற்றி தெரியாத முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், விவசாயம் குறித்து கருத்து தெரிவிக்கலாமா?” என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
h.raja
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது. அவர் வேளாண் சட்டத் திருத்த மசோதா குறித்து எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும்? இன்னும் 70 நாள்களில் 2ஜி அலைக்கற்றை விசாரணை தொடங்கவுள்ள சூழலில் தமிழ்நாட்டில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். காத்திருங்கள்" என்றார்.
இதையும் படிங்க:‘சக்ரா’ பட ஓடிடி வெளியீட்டு விவகாரம்: விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...!