சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உலக நாடுகள் அதற்கான மருந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான கிங் என்பவர், இதற்கான மருந்து முன்னதாகவே உள்ளதாகவும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளை வழங்கி குணப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அரசு மற்றும் சீன அரசு அனுமதித்தால் சீனாவிற்குச் சென்று மருத்துவம் பார்க்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்த அவர், இதற்காக இந்தியாவிற்கான சீனத் தூதர் மற்றும் இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறையினருக்குக் கடிதம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் அரசின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.