தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவனடியார் தற்கொலை விவகாரம் - காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்! - சேலம் சிவனடியார் தற்கொலை

திருப்பூர் : சேலம், தேவூர் அருகே சிவனடியார் தற்கொலைக்கு காரணமான உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவனடியார் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!
Sivanadiyar committed suicide

By

Published : Aug 31, 2020, 10:37 PM IST

சேலம் மாவட்டம், தேவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவனடியார் சரவணன். இவர் அப்பகுதியில் சிவ பூஜைகள் செய்தும், அருள்வாக்கு சொல்லுமாக ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தேவூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் அந்தோணி மைக்கேல்ராஜ், சிவனடியார் சரவணனை தகாத வார்த்தைகளால் பேசி, அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ பதிவு செய்துவைத்துவிட்டு, சிவனடியார் சரவணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், சிவனடியார் சரவணனின் தற்கொலைக்குக் காரணமான காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து மக்கள் கட்சி சார்பாக இன்று (ஆக. 31) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், உயிரிழந்த சரவணனின் குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details