வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கரோனா பரவலைச் சுட்டிக்காட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இது குறித்து, தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாகதெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்து முன்னணி அமைப்பு, அரசின் சட்டங்களை மதித்து நடக்கக் கூடியது. அதனால் வருகின்ற 22ஆம் தேதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், அவற்றை கரைப்பதற்கும் அரசு வழிவகை செய்து தர வேண்டும்.
மேலும், முந்தைய ஆண்டு போல் இல்லாமல் ஒருநாள் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் ஏதும் இல்லாமல் சிலைகளை எடுத்துச் செல்லவும் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். நக்சலைட் , கடவுள் மறுப்பு சிந்தனையுள்ள அலுவலர்கள் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசிய காணொலி ஆளும் அரசுக்கு சிறுபான்மையினர் ஆதரவு இம்முறை இருக்காது. ஆனால், இந்துகளின் முழு ஆதரவும் இருக்கும். நாளை ஒரு நாள் மட்டுமே இடையில் இருக்கும் சூழ்நிலையில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், அவற்றைக் கரைப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, நர்சிங் தெரபி பட்டயப் படிப்பிற்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!