தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இப்போதைய, அப்போதைய அரசுகள் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதில் முன்னோடி -இந்து முன்னணி தலைவர் சாடல்!

திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இப்போதைய, அப்போதைய அரசுகள் முன்னோடி என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி தலைவர் பேட்டி
இந்து முன்னணி தலைவர் பேட்டி

By

Published : Oct 26, 2020, 3:10 PM IST

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள பாஜக சேவை மையத்தில் இந்து முன்னணி சார்பில் குறும்படம் வெளியீட்டு விழா இன்று (அக். 26) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருடர் கூட்டம் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள குறும்படத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் ஏராளமான கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆண்ட கட்சியும் ஆளும் கட்சிகளுமே காரணம்.

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இதை கண்டித்து நவம்பர் 2ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போகிறோம்” எனத் தெரிவித்தார் .

இந்து முன்னணி தலைவர் பேட்டி

மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதுமே கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு இப்போதைய, அப்போதைய அரசுகள் துணை நின்றது மட்டுமின்றி, அவைதான் கோயில் நிலங்களிளை ஆக்கிரமிப்பதில் முன்னோடி” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஒபிசி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இந்தாண்டு இல்லை- உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details