வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்து முன்னணியின் நிலைப்பாடு குறித்து திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தியமில்லாத இலவசங்களை அனைத்து அரசியல் கட்சிகளுமே அறிவித்து மக்களை ஏமாற்றிவருகின்றன. குறிப்பாக திமுக இந்துக்களையும், இந்து கடவுள்களையும் அவதூறாகப் பேசிய கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு தற்போது கோயில் புனரமைப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக இரட்டை வேடம் போடுகிறது. கோயில் வருமானத்தை கோயிலுக்கே பயன்படுத்தினால் தனியாக நிதி ஒதுக்கத் தேவையில்லை” என்றார்.