ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பூ வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் கிலோ 600 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ தற்போது ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல 300 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த முல்லைப்பூவானது, தற்போது 500 ரூபாய்க்கும் 240 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த ஜாதி மல்லிப்பூ தற்பொழுது 480 ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது.
ஆயுத பூஜை கொண்டாட்டம்: 2 மடங்காக உயர்ந்த பூ விலை... குவியும் பொதுமக்கள்! - திருப்பூர்
திருப்பூர்: ஆயுத பூஜையை முன்னிட்டு பூ விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் அதனை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
hike in flower rate
மேலும் கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த செவ்வந்திப்பூ தற்போது 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பூ விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் அதிகளவில் பூவினை வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: 34 ஆண்டுகளுக்குப் பின் இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பெண்