தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா வாகனங்கள்! போக்குவரத்து பாதிப்பு - மழை வெள்ளத்தில் சிக்கிய வாகனம்

திருப்பூர்: கனமழை காரணமாக உடுமலையிலிருந்து மூணாறுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கிய வாகனம்

By

Published : Aug 8, 2019, 10:05 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சுற்றுலாதளமான மூணாறில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு நகர பகுதிகளிலும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் கன மழை காரணமாக உடுமலை - மூணாறு சாலையில் மூணாறு அருகே பெரியாவரை என்னும் இடத்தில் அமைந்துள்ள பாலம் மழைநீரால் பாதிப்புகுள்ளாகியுள்ளது. இதனால், மறையூரிலிருந்து மூணாறுவரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா வாகனங்கள்

மூணாறு மற்றும் மறையூரின் பல பகுதிகளில் சாலைகள் மழைவெள்ளத்தால் பாதிப்படைந்து வருவதால் உடுமலையிலிருந்து மூணாறுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details