தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்: காவல் துறை விசாரணை! - காவல் துறை சடலம் மீட்பு

திருப்பூர் : மூலனூர் அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்: காவல் துறை விசாரணை!
எரிந்த நிலையில் சடலம் மீட்பு

By

Published : Aug 8, 2020, 4:46 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூலனூர் காவல் துறையினர் பாதி எரிந்த நிலையில் கிடந்த நபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாதி எரிந்த நிலையில் கிடந்த நபர் யார் ? யாராவது அவரை கொலை செய்துவிட்டு இங்கு எரித்துள்ளார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details