கரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி கூடங்களை திறக்க கோரிக்கை - திருப்பூரில் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் கோரிக்கை
திருப்பூர்: உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள உடற்பயிற்சி கூடங்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்படும்வரை தங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனவும் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க... மன அழுத்தத்தை குறைக்க தூய்மைப் பணியாளர்களுக்கு உடற்பயிற்சி!